ரெஜினா ; விமர்சனம்

படத்தில் கதாநாயகி ரெஜினாவின் கணவர் வங்கி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவரை கொள்ளைக்காரர்கள் சிலர் கொடூரமாக கொலை செய்து விடுகிறார்கள். ஏற்கனவே பல கொலை சந்தித்து வரும் ரெஜினாவிற்கு தன்னுடைய காதல் கணவர் இழந்த இழப்பை ஏற்க முடியவில்லை. பின் இவர் குற்றவாளிகளை கைது செய்ய காவல் நிலையத்திற்கு செல்கிறார்.

எவ்வளவோ போராடியும் ரெஜினாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இனி சட்டத்தை நம்பி பிரயோஜனம் இல்லை என்று கொலை குற்றவாளர்களை கண்டுபிடித்து அவர்களை பழித்தீர்க்க திட்டம் தீட்டுகிறார் ரெஜினா. அவர்களை திட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தில் மீதி கதை.

ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் சுனைனா நடித்திருக்கிறார். படம் முழுவதுமே அவர் தான் சுமந்து சென்றிருக்கிறார். மற்றபடி மெயின் கேரக்டரில் வரும் நிவாஸ் ஆதித்தனும், ரித்து மந்த்ராவும் கவனிக்க வைக்கிறார்கள். இவர்கள் தவிர, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, கஜராஜ், தினா, அப்பானி ஷரத் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

பைப்பின் சுவத்திலே பிரணாயம்’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் டொமின் டி சில்வாவின் முதல் தமிழ் படம், அதை சிறப்பாக கொடுக்க முயன்றிருக்கிறார்.