குழலி விமர்சனம்

முக்குழி பிலிம்ஸ் சார்பில் கே.பி.வேலு, ஜெயராமன், ராமச்சந்திரன் தயாரிப்பில், செரா.கலையரசன் இயக்கத்தில் விக்னேஷ், ஆரா மகா, செந்தி, ஷாலினி நடித்துள்ள படம் தான் குழலி

சாதிய இறுக்கங்கள் நிறைந்திருக்கும் ஒரு கிராமத்தில் உயர் சாதிப் பெண் ஆராக்கும் தாழ்த்தப்பட்ட சாதியிலேயே கொஞ்சம் பெரிய ஆளான ஒருவரின் மகன் விக்னேஷ்க்கும் காதல்.

பல வருடங்களுக்கு முன்பு உயர் சாதி நபர் ஒருவன் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை காதலித்துக் கர்ப்பமாக்க , அந்தக் காதலை உயர் சாதி ஆட்கள் ஏற்காததோடு சம்மந்தப்பட்ட பெண்ணின் அப்பாவை நாயை விட்டுக் கடிக்க வைத்து அவமானப்படுத்தி விடுகிறார்கள் . அந்த விசயத்தில் உயர்சாதி ஆட்களிடம் பேசி நியாயம் பெறப் போராடவில்லை என்று நாயகனின் அப்பா மீது சக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோபம்.

இந்த சூழலில் இந்தப் புதிய காதலைக் கண்டு பிடிக்கும் அந்த தாழ்த்தப்பட்ட சமூக சக நபர் ஒருவன் , பெண்ணின் தாய்மாமாவிடம் போய் , ”அப்போ ஏமாந்துட்டோம் இந்த முறை விட மாட்டோம் . இந்தக் காதல் நிறைவேற வேண்டும்” என்று கொடி பிடிக்க, விஷயம் பெண்ணின் அம்மாவுக்கும் உறவுகளுக்கும் சாதிக்காரர்களுக்கும் தெரிய வர, மருத்துவராகும் கனவோடு காதலித்த அந்தக் காதல் ஜோடிக்கு என்ன ஆச்சு என்பதே குழலி .

காக்கா முட்டை விக்னேஷ், ஆயகி ஆரா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மஹா, ஷாலினி, அலெக்ஸ் உள்ளிட்ட அனைவரும் அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள்.

சமீரின் ஒளிப்பதிவில் கிராமத்து வெளியழகும் தாழ்த்தப்பட்ட மக்களின் உள்ள உணர்வும் காட்சிகளாகப் பதிவாகியிருக்கின்றன.

டி.எம்.உதயகுமாரின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.

காதலுக்காக எதையும் தூக்கிப்போடுகிறவர்கள் மத்தியில் கல்விக்காகக் காதலைத் துறக்கவும் துணியும் புதிய இளையவர்களைக் காட்டி புது நம்பிக்கையூட்டுகிறார் இயக்குநர் செரா. கலையரசன்.

மொத்தத்தில் அந்தக் கால பாணியில் ஒரு படம் பாக்கணும் என்போர்க்கு வாய்ப்பு இந்த குழலி.
.