சாயா சிங், தம்பி ராமையா மற்றும் துஷ்யந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் லில்லி ராணி.
போலீசான தம்பி ராமையா விலைமாதுவான சாயாசிங் உடன் ஒரு நாள் இருக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு சாயா சிங் ஒரு குழந்தைக்கு தாயாகிறார். ஆனால் அந்த குழந்தை எலும்பு மஜ்ஜை நோய். அதற்கு சிகிச்சை அளிக்க, அந்தக் குழந்தையின் தந்தையின் உடல் திசுக்கள் மருத்துவ ரீதியாகத் தேவைப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், பல லட்சம் வரையில் பணமும் தேவைப்படுகிறது.
வேறு வழியின்றி உதவி தேடி தம்பி ராமையாவிடம் செல்கிறார் சாயா. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறும் தம்பி ராமையா அந்த குழந்தைக்கு உதவி செய்ய நினைக்கிறார். அதனால் அமைச்சர் மகன் துஷ்யந்தை வைத்து பணம் பறிக்க திட்டமிடுகிறார்கள் தம்பி ராமையாவும், சாயாவும்.
இறுதியில் என்ன நடந்தது ? குழந்தை காப்பாற்றப்பட்டதா ? இல்லையா என்பதே மீதிக்கதை.
இயக்குனர் விஷ்ணு ராமாகிருஷ்ணன் ஒரு மலையாள படம் பார்க்கும் பீலிங்கை நமக்கு கொடுக்க முயன்றிருக்கிறார்.
செலேக்டிவான கதைகளில் நடித்து வரும் சாயா சிங், இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். துஷ்யந்த், தம்பி ராமையா இருவரும் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜெர்வினின் இசையும், ஷிவர் தர்ஷனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பிளஸ்.