கணம் ; திரை விமர்சனம்

இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா அக்கினேனி, ஷர்வானந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், சதீஷ் மற்றும் நாசர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கணம்.

இன்று நேற்று நாளை படத்தை போல டைம் மெஷின் கான்செப்ட்டில் உருவாகி உள்ளது இந்த படம்.
சிறு வயதில் விபத்தில் தனது அம்மாவை இழக்கும் ஆதிக்கு (ஷர்வானந்த்) டைம் டிராவல் மூலம் மீண்டும் தனது அம்மாவை (அமலா அக்கினேனி) சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்பாராத அந்த மரணத்தில் இருந்து தனது அம்மாவை காப்பாற்றுகிறாரா? இல்லையா? என்பது தான் கணம் படத்தின் கதை. டைம் டிராவால், சயின்ஸ் ஃபிக்‌ஷன் என வேறு கதைக்குள் செல்லாமல் மகனுக்கும் அம்மாவுக்கான பாசத்தை மட்டுமே இயக்குநர் மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி உள்ளார்.

விஞ்ஞானி ரங்கி குட்டப்பால் (நாசர்) 20 ஆண்டுகளாக போராடி கண்டுபிடித்த டைம் மெஷினில் நாயகன் ஆதியை பயணம் செய்ய அனுமதிக்கிறார். ஆனால், ஒரு கண்டிஷனோடு! நாயகன் அவன் மட்டும் செல்லாமல், தனது நண்பர்களான சதீஷ் மற்றும் ரமேஷ் திலக்கை உடன் அழைத்துச் செல்கிறார்.

விபத்தில் உயிரிழந்த தனது அம்மாவை மீண்டும் சென்று சந்திக்கும் அந்த கணம் நெஞ்சை பிழிகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடித்துள்ள அமலா சரியான கம்பேக் கொடுத்துள்ளார்.

அமலா, சர்வானந்த் இருவரும் தங்களின் கதாப்பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள்.

எடுத்துக் கொண்ட கதையில் கடைசி வரை சரியாக பயணிப்பது மற்றும் இடைவேளையில் வரும் அந்த ட்விஸ்ட், எதிர்பாராத கிளைமாக்ஸ் என ஏகப்பட்ட பிளஸ்கள் உள்ளன.

கணம் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு பீல் குட் படம்.