நாட் ரீச்சபிள் – விமர்சனம்

அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு பெண் காணாமல் போகிறார். அவர்களைக் கொலை செய்தது யார்? என்பதைக் காவல்துறை துப்பறிந்து கண்டுபிடிப்பதே நாட் ரீச்சபிள் படம்.

காவல்துறையில் இந்தக் கொலைவழக்கில் விசாரணை அதிகாரிகளாக வரும் விஷ்வா மற்றும் சுபா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். விஷ்வா நிதானமாகவும் சுபா கோபமாகவும் அணுகுவது வழக்கு விசாரணையின் தன்மைகளை உணரவைக்கிறது.

கவனிக்க வைக்கிற வேடம் சாய் தன்யாவுக்கு. மனநிலை தவறிய அவரை தொடக்கத்திலிருந்து அவ்வப்போது காட்டி வருகிறார்கள். அதற்கு இறுதியில் சிறப்பான விடை இருக்கிறது.

காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லாபோஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி உள்ளிட்டோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

கொலை வழக்குகளை காவல்துறை அணுகும் விதம், கதாபாத்திரங்கள் ஆகியவற்றை இயக்குனர் சந்துரு முருகானந்தம் நிறைவாகச் செய்திருக்கிறார். எழுதி இயக்கியிருப்பதோடு படத்தொகுப்பும் செய்திருக்கிறார் சந்துரு முருகானந்தம்.

சரன்குமாரின் இசையும், சுகுமாரன் சுந்தரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

படத்தின் மையக்கதை நம் வீட்டில் ஒரு பெண் இருந்தால் அண்டை வீட்டுப் பையனை நம்பக்கூடாது என்கிற இடத்திலிருந்து அங்கு ஒரு பெண் இருந்தாலும் அவளையும் நம்பக்கூடாது எனும் தொனியில் அமைந்திருப்பது வருத்தம்.