கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் தங்க பொண்ணு (ரோகிணி), திடீரென காணாமல் போய்விடுகிறார். கண்டுபிடித்து தரச் சொல்கிறார்கள் அவர் மகள்கள். விவகார ஊரான அங்கு செல்ல, காவலர்கள் மறுத்துவிட, புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் ஹெட் கான்ஸ்டபிள் சுப்பிரமணி (பசுபதி) செல்கிறார். அவரைக் கண்டுபிடித்த நிலையில் திடீரென மரணமடைகிறார் தங்கபொண்ணு. சடலமாக வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரின் 4 மகள்களும் மகனும் அவர் காதில் மாட்டியிருக்கும் தண்டட்டியை (பாம்படம்) எப்படி கைப்பற்றலாம் என தனித்தனியாகத் திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் திடீரென மாயமாகிறது தண்டட்டி. அதைத் திருடியது யார்? ஹெட்கான்ஸ்டபிள் சுப்பிரமணி அதைக் கண்டுபிடித்தாரா? அந்தத் தண்டட்டி யாருக்குச் சொந்தமானது என்பதைக் கொஞ்சம் நகைச்சுவை, நிறைய சுவாரஸ்யம் மற்றும் திருப்பங்களோடு ரசனையாகச் சொல்கிறது படம்.
படத்தில் மூதாட்டி கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணி நடித்திருக்கிறார். தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். சிறுவயது ரோகினி கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி நடித்திருக்கிறார். இவரை அடுத்து கதாபாத்திரத்தில் சுப்ரமணி கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. படம் முழுக்க இவர் தோளிலேயே தாங்கி செல்கிறார் என்று சொல்லலாம்.
குடிகாரராக விவேக் பிரசன்னா சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கபொண்ணுவின் மகள்களாக நடித்த பூவிதா, தீபா சங்கர், ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோர் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
மொத்தத்தில் தண்டட்டி வரவேற்கப்பட வேண்டிய படம்.