அருண்விஜய்க்கு அடித்தது ஜாக்பாட்


சமீபத்தில் அருண்விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் தடம் என்கிற படம் வெளியானது. முதன்முதலாக அருண்விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்திருந்த இந்தப்படம் விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்துடன் வெளியானதால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இரண்டு கதாபாத்திரங்களையும் ஒரே சாயலில் உருவாக்கியிருந்தாலும் இரண்டையும் தனது நடிப்பால் வித்தியாசப்படுத்தி இருந்தார் அருண்விஜய்.

இந்த படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக் ஆக இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தின் ரீமேக் ரைட்ஸ் ஒரு நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண்விஜய் ஜாக்பாட் அடித்த குஷியில் இருக்கிறாராம்.