காளி வெங்கட்டின் பிரண்ட்ஷிப்பை கட் பண்ண நினைக்கும் பாலசரவணன்..!


நகைச்சுவை நடிகர்கள் காளி வெங்கட்டும், பாலசரவணனும் ஆளை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல, சந்தானம், சூரி போன்ற காமெடியன்கள் கிடைக்காத குறையை நிவர்த்தி செய்து வருகின்ர்டனர்.. அந்தவகையில் பிச்சுவா கத்தி படத்தில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்..

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றபோது இதில் கலந்துகொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டனர். குறிப்பாக பாலசரவணனை அனைவரும் அண்ணன் என அழைத்து பேசினார்கள்.. அவர் பேசும்போது, என்னை எல்லோரும் அண்ணன் ரேஞ்சுக்கு வயதானவர் போல நினைக்கிறார்கள்.. அனேகமாக காளி வெங்கட் மாதிரி வயதான ஆட்களுடன் சுற்றுவதால் அப்படி நினைக்கிறார்களோ என்னவோ, இனி காளி வெங்கட் பிரன்ட்ஷிப்பை கட் பண்ண வேண்டியதுதான்” என வேடிக்கையாக கூறினார் பாலசரவணன்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய காளி வெங்கட், “வர்றியா..? போட்டோ எடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்துடலாமா. யார் வயசானவங்களா தெரியுறாங்கன்னு” என சவால் விட, ஏனோ பாலசரவணன் அப்படியே அமைதியாகிவிட்டார்.