“எங்கிட்ட ஏன் கேட்கிறீங்க…?” ; கொந்தளித்து கோபமுகம் காட்டிய கே.ஜே.யேசுதாஸ்..!


பத்திரிகையாளர்கள் சினிமா பிரபலம் ஒருவரிடம் இன்னொருவரை பற்றி கேள்விகேட்டால் அவர்களுக்கு தனது கருத்தை பதிலாக சொல்வது ஒரு ரகம். இளைஎன்றால் ‘னோ கமெண்ட்ஸ்’ என டீசண்ட்டாக பதில் சொல்லிவிட்டு ஒதுங்குவது இன்னொரு ரகம்..

அதைவிட்டுவிட்டு என்னிடம் என் கேட்கிறீர்கள்.. அவரிடம் போய் கேட்கவேண்டியது தானே என சீறுவது மூன்றாவது ரகம்.. இத்தனை நாட்கள் அமைதியானவராக காட்சியளித்த பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இளையராஜா மற்றும் தேசிய விருது குறித்த கேள்விகளுக்கு விட்டேத்தியாக பதிலளித்துள்ளார்.

இளையராஜா தன் பாடல்களை பாடக்கூடாது என்று பாடகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் “நான் யாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பவில்லை. அனுப்பியவரிடம் இந்த கேள்வி கேளுங்கள்” என்றார்.

தேசிய விருதுகள் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே? என்று கேட்டபோது “குற்றச்சாட்டை கூறியவர்களிடமும், தேசிய விருது வழங்குபவர்களிடமும் சென்று கேளுங்கள்” என்று கூறியபடி கோபத்துடன் வேகமாக எழுந்து சென்றுவிட்டார்.