இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் “இறுதி சுற்று”

இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “இறுதி சுற்று”

வாயை மூடி பேசவும் மற்றும் காவியத்தலைவன் போன்ற படங்களை வருண் மணியன் அவர்களின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த சசிகாந்தின் “Y” நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது பிரபல தயாரிப்பாளர் சீ.வீ.குமாரின் திருக்குமரன் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் “இறுதி சுற்று”

முதல் முறையாக இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் படம் இதுவே.

மாதவன், நாசர், ரித்திகா, மும்தாஜ் மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் தயாராகிறது.

சுதா கொங்காரா இப்படத்தை இயக்குகிறார். பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்து வெளியான “துரோகி” படத்தை இயக்கியவர்.

படத்தின் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்: இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – சிவா, படத்தொகுப்பு – பிரவின் கே.எல், கலை – சந்தானம்.