மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு ஹீரோக்கள் வேண்டுமானால் மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துவிட்டு தவம் கிடக்கலாம்.. ஆனால் நடிகைகளில் யார் அப்படி இருக்கிறார்கள்.. அதிலும் கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் தமிழ் பீல்டுக்குள் நுழைந்த வேகத்தில் நான்கைந்து படங்களை கைப்பற்றி பிஸியாக நடித்து வருகிறார்கள்..
மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் கீர்த்தி சுரேஷ் எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோஷப்பட்டாரோ, அதே அளவுக்கு அவர் படத்தில் இருந்து விலகும்போது வருத்தமும் பட்டுள்ளார்.. ஆனால் தவறு அவர் பக்கம் இல்லையாம். மணிரத்னம் கேட்ட தேதிகளில் கால்ஷீட் கொடுத்தாராம்.
ஆனால் மணிரத்னம் தான் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லையாம். முதலில் துல்கர் சல்மானை ஹீரோவாக பிக்ஸ் பண்ணி வைத்திருந்தவர், பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. நானியை ஹீரோவாக மாற்றினார்.
இந்த களேபரங்களால் கீர்த்தி சுரேஷ் கொடுத்த தேதிகள் வீணானதாம்… மீண்டும் அவரிடம் வேறு தேதிகள் கேட்டபோது, அவர் அந்த தேதிகளை ஒரு தெலுங்கு படத்திற்கு கொடுத்துவிட்டராம். அவர் ஏற்கனவே ஒருமுறை ஸ்ருதிஹாசன் பாணியில் ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்திற்கு தாவி கெட்டபெயரை சம்பதித்துக்கொண்டுள்ளார்.. தமிழில் ஒகே.. கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஆனால்.. தெலுங்கில் இருந்து அப்படி எஸ்கேப் ஆக முடியாது என்பதால் வருத்ததுடன் மணிரத்னம் படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.