கிட்னியை உருவும் வடிவேலு காமெடி பாணியில் ராதிகா ; அலர்ட்டான பாண்டவர் அணி..!

ஒரு படத்தில் வடிவேலு, டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டு இருக்கும்போது, சின்னப்பையன் ஒருவன் வலுக்கட்டாயமாக அவரை வம்புக்கு இழுத்து, ஒரு வேனுக்குள் கூட்டிக்கொண்டுபோய் அவரது கிட்னியை உருவிவிடுவான் இல்லையா, அது போல நடிகர்சங்க தேர்தல் முடிந்தபின்னும், ராதிகாவின் ஆவேசம் இன்னும் தணியாமல் இருப்பதால் வேண்டுமென்றே ‘உறண்டை’ இழுப்பதற்காக சமயம் பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறாராம்..

அதனால் தான் சரத்குமார் ஏற்கனவே நடிகர் சங்க ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக சொன்னதுமே, அடுத்த கணமே பாண்டவர் அணியை பார்த்து “வெட்கி தலை குனியுங்கள்.. என் வீட்டுக்காரர் உத்தமன்” என கோபத்தில் ட்வீட் போட்டார். ஆனால் அந்த ஒப்பந்தம் ரத்து ஆகவே இல்லை என பத்திரப்பதிவு அலுவகத்தின் மூலம் குட்டு உடைய இப்போது அவர் வெட்கி தலைகுனிவாரா என பாண்டவர் அணியில் இருந்து யாரும் எதிர் கேள்வி கேட்கவில்லை..

காரணம் சிவகுமார், எதிர் அணியினர் எது பேசினாலும் பதில் பேசவேண்டாம், கண்டுகொள்ளாமல் போய்விடுங்கள் என ஏற்கனவே பாண்டவர் அணிக்கு, ஆலோசனை சொல்லியிருக்கிறாராம். அதனால் தான் கிட்னியை உருவுவது போல வழிய ராதிகா போட்ட ட்வீட்டுக்கு யாரும் ரெஸ்பான்ஸ் பண்ணவே இல்லையாம்.