பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்” ; அடம்பிடிக்கும் விஜய்..!

யப்பா… ஒவ்வொரு படத்துக்கும் இந்த டைட்டில் பிடிக்கிற விஷயத்துல விஜய்யும் தனுஷும் பண்ற அக்கப்போர் இருக்கிறதே.. தங்க முடியலடா சாமி.. ரஜினி தன்னோட மாமனார்ங்கிறதால தனுஷ் எப்படியோ அப்ளிகேஷன் போட்டு ரஜினி பட டைட்டிலா வாங்கி தன்னோட படத்துக்கு வசசுடுறாரு..

வேற வழியில்லாம விஜய், எம்.ஜி.ஆர் டைட்டிலா தேடிப்போனாரு. ஆனா அப்படி டைட்டில் வச்ச படங்கள் வரிசையா ஊத்திக்கிட்டதால கடுப்பான எம்.ஜி.ஆர் ரசிகருங்க இனி எம்.ஜி.ஆர் டைட்டில வச்சா படத்த ரிலீஸ் பண்ண விடமாட்டோம்னு போர்க்கொடி தூக்கினாங்க..

அப்புறம் துப்பாக்கி, கத்தி, புலின்னு அப்படி இப்படி டைட்டிலை வச்சாலும் ரஜினியோட மாஸ் டைட்டில எப்படியாவது வாங்கி வச்சிரணும்னு ஒருபக்கம் போராட்டம் பண்ணிக்கிட்டுத்தான் இருக்காரு விஜய்.. என்னங்க விஷாலுக்கு டைட்டில் கொடுக்கிறாங்க.. விஜய்க்கு கொடுக்க கூடாதா..?

மாட்டேன்னு சொல்லிட்டாங்களே.. ‘இப்போ போலீஸ் கெட்டப்புல விஜய் நடிக்கிற படத்துக்கு ‘மூன்றுமுகம்’ டைட்டில கேட்டு பார்த்தாரே… ஆனா அந்தப்படத்த தயாரிச்ச சத்யஜோதி நிறுவனம் கேட்டை இழுத்து மூடிருச்சே.. சரி ‘காக்கி’ன்னு ஒரு டைட்டில வைக்கலாம்னு பார்த்தா, அத வேற ஒருத்தர் பதிஞ்சு வச்சுக்கிட்டு தரமாட்டேன்னு சொல்லிட்டாரு..

ஆனா இவரு விடாப்படியா அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு சொல்றாரு.. கலைப்புலி தாணு எப்படியும் ஆளைவச்சு வாங்கிருவார்னு வைங்க.. ஏங்க இந்த தனுஷ், விஜய் எல்லாம் ‘நேரம் இருந்தா வந்து பார்க்கிறேன்’, ‘மதுரைக்கு எத்தனை மணிக்கு பஸ்’சுன்னு இந்த ரேஞ்சுல எந்த டைட்டிலை புதுசா வச்சாலும் அது ஹிட்டாகுமேங்க.. அப்புறமும் ஏங்க இன்னும் ரஜினி டைட்டிலையே பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்காங்கன்னு தான் தெரியலை..