தமிழ் சினிமாவுக்குள் நுழையும்போது இந்தப்பூனையும் பால் குடிக்குமா எங்கிற வகையில், ‘ஐயா’ என கும்பிடு போட்டபடி நுழைந்த நயன்தாரா இப்போது சீனியாரிட்டியில் த்ரிஷாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்திலும் டாப் ஹீரோயின்கள் பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கிறார்.
ஆனால் த்ரிஷா இவருக்கு சீனியர் தான் என்றாலும் இன்னும் அவரது முகத்தில் முதிர்ச்சி எட்டிப்பார்க்கவில்லை.. அன்று பார்த்ததுபோலவே இன்றும் இருக்கிறது த்ரிஷாவின் முகம். ஆனால் நயன்தாராவுக்கோ அவரது முகத்தோற்றம் ‘வில்லு’ படத்தில் இருந்தே மாற தொடங்கிவிட்டது.. அதற்கு அவராக தன்மேல் ஏற்றிக்கொண்ட மனச்சுமைகளும் கூட காரணமாக இருக்கலாம்.
ஆனால் அந்த முதிர்ச்சி இப்போது நயன்தாராவின் முகத்தில் நன்றாகவே தெரிய ஆரம்பித்துவிட்டது. ஒருசில படங்களில் மட்டும் எப்படியோ பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்து பளிச்சென தெரியும் நயன்தாரா, பல படங்களில் அவசரமாக எப்.சி எடுத்த அரசுப்பேருந்து மாதிரி தான் இருக்கிறார்.
நயன்தாரா என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் அவரால் இளம் முன்னணி ஹீரோக்களுடனும் நடிக்க முடிகிறது என்கிறார்கள் தயாரிப்பு தரப்பினர்.. இதெ இன்னொரு நடிகையாக இருந்தால் பல இரண்டாம் கட்ட இளம் நடிகர்களே, “ச்சீச்சீ.. இந்த முத்தின பழம் நமக்கெதுக்கு” என எப்போதோ விலகியிருப்பார்களாம்.
நயன்தாராவின் நட்பு வட்டாரமும் இதை நேரடியாக அவரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறதாம். தவிர நயன்தாராவின் தோற்றம் பற்றி ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். நயன்தாராவின் காதுக்கு எப்படியோ இந்த விஷயம் வந்தவுடன், தற்போது சுதாரித்துக்கொண்ட நயன்தாரா மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல ஸ்பாட்டில், தான் நடித்த காட்சிகளை ஷாட் முடிந்ததும் போட்டு பார்த்து அதில் ஒகே என்றால் தான் திருப்தி அடைகிறாராம். தனக்கு திருப்தி இல்லையென்றால் இயக்குனர் ஒகே சொன்ன ஷாட்டை கூட, இல்லையில்லை திரும்ப ஒரு தடவை எடுத்துக்கொள்ளலாம் என சொல்லி விடுகிறாராம்.
சொல்வது நயன்தாரா என்பதால் இயக்குனர்களும் ஒன்றும் சொல்லமுடியாமல் அவர் இஷ்டத்திற்கு விட்டு விடுகிறார்களாம். எத்தனை நாளைக்கு இந்த நிலை தொடரும் என அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..