பத்து வருடங்களுக்கு முன்புவரை முன்னணி பாடலாசிரியராக விளங்கியவர் பா.விஜய். இவரது கேரியரின் உச்சகட்டமாக ஆட்டோகிராப் படத்தில் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு 2005 ஆம் ஆண்டு தேசிய விருதும் பெற்றார். பாடலாசிரியராக செமத்தியாய் சம்பாதித்துக்கொண்டிருந்த பா.விஜய்க்கு திடீரென ஹீரேரவாக நடிக்கும் ஆசை ஏற்பட்டது. இந்த இடத்தில் சனிபகவானின் உக்கிரப்பார்வைக்கு ஆளானார் பா.விஜய்
ஞாபகங்கள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஒன்றிரண்டு நாட்களிலேயே தியேட்டர்களிலிருந்தும், ரசிகர்களின் ஞாபகங்களில் இருந்தும் தூக்கப்பட்டது இந்தப்படம். பிறகு லாட்டரி வியாபாரி மார்ட்டின் தயாரிப்பில் பல கோடி செலவில் இளைஞன் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் சில லட்சங்களைக் கூட கலெக்ட் பண்ணவில்லை.
சரி, இத்துடன் நடிக்கும் ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டு பாட்டு எழுதுவதில் கவனம் செலுத்துவார் என்று பலரும் எதிர்பார்த்தநிலையில், மறுபடி தகடு தகடு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் பா.விஜய். ஆனால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகி பல மாதங்களாகிவிட்டன. படத்தை வாங்க ஆள் இல்லாததால் டப்பாவில் சுருண்டு கிடக்கிறது..
இதில் என்ன காமெடி என்றால் பா.விஜய் என்ற நடிகரின் நிலவரம் இப்படி கலவரமாகக்கிடக்க… தான் கலந்து கொள்ளும் விழாக்களில் தன்னை மேடைக்கு அழைக்கும்போது, நடிகர் பா.விஜய் என்று குறிப்பிடும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால் அதே பா.விஜய் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள ‘யட்சன்’ படத்தில் பாடல்கள் எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்ல, அந்த விழாவில் என்ன சொன்னார் தெரியுமா..? இதுவரை தான் மூவாயிரம் பாடல்கள் எழுதியுள்ளதாகவும், தான் எப்போதாவது பிரஸ்மீட் வைத்து நான் நடிகனாகவிட்டேன், இனிமேல் பாடல்கள் எழுதப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறேனா.. நீங்களாக நினைத்துக்கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்கிற ரேஞ்சில் பொங்கி தள்ளிவிட்டார் பா.விஜய்.
இப்ப சொல்லிட்டீங்கள்ல.. இனி வாய்ப்பு வரும் விஜய்…