விஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா பார்த்திபன்?


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் வரை தமிழ் புத்தாண்டை ஒட்டி ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் பிக்சரில் விஜயும் பார்த்திபனும் இணைந்தால் மாஸாக இருக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பார்த்திபன் இவ்வாறு பதிலளித்துள்ளார்,

“மாஸுக்கு மாஸ்டரை பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனை பிடிக்கும். நண்பன் படத்தை என்னையே முதலில் இயக்க சொன்னார். அழகிய தமிழ் மகனுக்கு எழுத சொன்னார். நாளை இன்னும் அடுத்த கட்டத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

பார்த்திபனின் இந்த பதிவு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.