சீசனுக்கு மட்டும் வெளிப்படும் ஷாருக்கானின் ‘ரஜினி’ பாசம்..!


தன்னை எப்போதுமே ரஜினியின் ரசிகனாகவே காட்டிக்கொள்ள விரும்பும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சில வருடங்களுக்கு முன் தான் நடித்திருந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் கூட ரஜினியை புகழ்ந்து ஆடிப்பாடுவது போல ‘லுங்கி டான்ஸ்’ என்கிற ஒரு பாடலை படத்தில் வைத்திருந்தார்.. அதேபோல சென்னைக்கு வந்து ரஜினியை புகழ்ந்து லுங்கி டான்சும் ஆடிவிட்டு போனார்..

அதற்கடுத்து அவரது ரா-1 படத்திலும் ரஜினியை கௌரவ வேடத்தில் நடிக்க அழைப்பு விடுத்து நடிக்க வைத்தார். இப்போது அவர் ‘ஃபேன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. இதுபற்றி அவர் தனது டிவிட்டரில் ரஜினியை சுட்டிக்காட்டி நான் என்றும் உங்கள் ரசிகராகவே இருக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்..

இவரற்றை எல்லாம் படிக்கும்போதோ அல்லது மேலோட்டமாக பார்க்கும்போதோ அட சூப்பர்ஸ்டாருக்கு இப்படி ஒரு ரசிகரா என தோன்றலாம். ஆனால் ஷாருக்கானின் ரஜினி பாசம் சீசனுக்கு மட்டும் வந்துபோக கூடியது.. அதாவது அவரது படம் வெளியாகும்போதும், அவர் சென்னைக்கு தனது பட புரமோஷன் நிகழ்ச்சி தொடர்பாக வரும்போதும் ரஜினி லேபிளை பயன்படுத்துவது வழக்கம். இப்போதும் அதுதான் நடக்கிறது என்கிறார்கள்.