அண்டர்பிளே செய்தபடி அண்டர் கிரவுண்டிலேயே நிற்கும் நடிகர்..!

“என்னதான் தெலுங்கு திரையுலகில் முக்கியமான நிலையான ஒரு இடத்தைப் பிடித்தாலும் நான் பிறந்த என் சொந்த ஊரான தமிழ்நாட்டில் என்னால் நல்ல ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது” என்று சித்தார்த் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியின்போது வருத்தத்துடன் சொன்னார்.. அதே உத்வேகத்துடன் களம் இறங்கினார்.

‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தமிழ்த்திரையுலகில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த சித்தார்த்துக்கு சுந்தர்சி.யின் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் நல்ல ரெஸ்பான்சை கொடுக்க, கடந்தவருடம் வெளியான ‘ஜிகர்தண்டா’வும் ஹிட் வரிசையில் சேர்ந்தது.. ஆனால் பின்னாடி வந்த காவியத்தலைவனும், எனக்குள் ஒருவனும் குப்புறடித்து படுத்துக்கொள்ள சித்தார்த் பழையபடி ஆரம்பித்த இடத்துக்கே வந்து நிற்கிறார்.

இதில் ஆபரேசன் சக்சஸ் ஆனால் பேஷன்ட் அவுட் என்கிற கதையாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சித்தார்த் அன்டர்பிளே செய்ய பெயரைத்தட்டிக்கொண்டு போனதோ சந்தானம் தான். ஜிகர்தண்டாவிலும் சித்தார்த்துக்கு இதே அண்டர்பிளே தான்.. சிம்ஹாவுக்கு வெயிட்டான ரோல்.. படம் ஹிட்.. ஆனால் வில்லனாக நடித்த சிம்ஹாவுக்குத்தான் இதனால் லைப் கிடைத்தது.. இதோ இப்போது தேசிய விருதும் கிடைத்தது..

காவியத்தலைவன் படம் பிளாப் என்றாலும் கூட்டிக்கழித்து பார்க்கும்போது அதன் கணக்கும் இதே ரீதியில் தான் அமைந்தது. பிருத்விராஜை நடிப்பு ராட்சசன் என ஒரு பிரஸ்மீட்டில் சித்தார்த்தே புகழ்ந்தார். படம் பார்க்கும்போது தான் தெரிந்தது அந்த ராட்சசன் சித்தார்த்தை விழுங்கியதும். ‘எனக்குள் ஒருவன்’ தான் யாருடனும் கூட்டணி சேராமல் தானே சொந்தமாக பிளாப் வாங்கிய திருப்தியை சித்தார்த்துக்கு தந்திருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் ஒருவர் சித்தார்த்திடம் டபுள் ஹீரோ கதை ஒன்றைச்சொல்லி மற்றொரு ஹீரோவாக சிம்ஹாவின் பெயரை கூறியுள்ளார். இதை கேட்டதும் கோபம் கொண்ட சித்தார்த், அந்த ஆள் நடிப்பதாக இருந்தால் உங்கள் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டாராம்.

நிலைமையை புரிந்துகொண்ட இயக்குனர் “கோபப்படாதீர்கள். நான் வேறு ஒருவரை இரண்டாவது ஹீரோவாக நடிக்க வைக்கிறேன்” என்று சொல்லித்தான் அவரை சமாதானம் செய்தாராம். ஆக இனி வரும் காலங்களில் அண்டர்பிளே செய்தபடி அண்டர் கிரவுண்டிலேயே நிற்பதா இல்லை பிளாப் கொடுத்தாலும் கூட தனி ராஜாங்கம் நடத்துவதா என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம் சித்தார்த்.