வேட்பு மனு விவாகரத்தை தொடர்ந்து பட ரிலீசிலும் விஷாலுக்கு ஏற்பட்ட பின்னடைவு..!


ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்யப்போய் புஸ்வாணம் ஆகிய கதை தெரிந்தது தான். இந்தநிலையில் சொன்ன தெர்தியில் படத்தை ரிலீஸ் செய்துவந்த விஷாலுக்கு அவரது இரும்புத்திரை பட ரிலீசிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், தயாரித்து, நடித்துள்ள படம் இரும்புத்திரை. அர்ஜூன் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருக்கிறார். இரும்புத்திரை தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாகிறது.

இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார் விஷால். ஆனால் இப்போது பொங்கல் ரேஸில் இருந்து இரும்புத்திரை பின்வாங்கி விட்டது. மாறாக, ஜனவரி மாதம் 26-ந் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். பொங்கலுக்கு ஏற்கனவே சில பெரிய படங்கள் அணிவகுத்து நிற்பதால் விஷால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.