நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் காதல் பற்றி கேட்டால் இருவரும் பதில் அளிக்காமல் இருந்தனர். அதேசமயம் ஆங்காங்கே ஜோடியாக சுற்றுலா செல்லும் இவர்கள் ரொமான்ஸ் மூடில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் நடந்த விருது விழாவில் விக்கியை வருங்கால கணவர் என்றார் நயன்தாரா. ஆனால் கல்யாணம் எப்போது என்பது பற்றி இருவருமே வாய் திறக்கவில்லை. ஆனால் சமீபத்தில் நயன்தாரா நடித்த, கோலமாவு கோகிலா படத்தில், அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய, எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சிடி என்கிற பாடல், வெளியானது. அவ்வரிகளை மேற்கோள் காட்டி, நயன்தாராவுக்கு, வெய்ட் பண்ணவா..என, விக்னேஷ் சிவன் கேள்வி எழுப்பி, நயன்தாராவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை, தன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் கல்யாணம் பண்ணிக்கொள்வதில் விக்னேஷ் சிவன் தீவிரமாக இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.