ரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்…!


சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித்தின் கூட்டணியில் அடுத்த அதிரடியாக உருவாகியுள்ளது ‘காலா’. ‘கபாலி’ படத்தில் ரஜினி ரசிகர்களின் நாடி நரம்பையெல்லாம் ‘நெருப்புடா’ பாடல் மூலம் முறுக்கேற வைத்த இயக்குனர் சந்தோஷ் நாராயணனுக்கு, அதே பா.ரஞ்சித் டைரக்சன் என்பதால், ரஜினி படத்திற்கு இரண்டாவது முறையாக இசையமைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது ‘காலா’.

அவரும் தனது பங்கிற்கு ‘காலா’ ரஜினிக்கான அறிமுக பாடல் 1980 காலகட்டத்து ட்யூன் மாதிரி இருக்க வேண்டுமா? அல்லது 1990 முதல் 2000 காலகட்டத்து பாடல் போல இருக்க வேண்டுமா? இல்லை என்றால் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி வேண்டுமா? இல்லை எல்லாம் கலந்த கலவையாக வேண்டுமா?’ என்று ரசிகர்களிடமே கேள்விகளை கேட்டுவிட்டு, தனக்கு தோன்றியபடி இசையமைத்தும் கொடுத்துவிட்டார்..

அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் ரஜினி நடிக்கிறார் அல்லவா..? கார்த்திக் சுப்பராஜ் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருபவர் சந்தோஷ் நாராயணன்.. அதனால் மீண்டும் ரஜினி படத்துக்கு அவர்தான் இசையமைப்பார் என ஒரு பேச்சு அப்போது ஓடியது.. ஆனால் காலா, கபாலி, இரண்டு படத்திலும் ரஞ்சித்தின் மனதிற்காக அவருடைய பாணியில் இசையமைக்க ஒப்புக்கொண்ட ரஜினி, தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்தால் அது சரியாக இருக்காது என நினைத்தார்..

அதுமட்டுமல்ல, தங்கள் வீட்டுபிள்ளை அணிருத்திற்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே என்றுதான் அனிருத்தை இசையமைக்க சொல்லிவிட்டார். கார்த்திக் சுப்பராஜுக்கு இதில் கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும் தலைவர் படத்தை இயக்கப்போகிறோம், யார் இசையமைத்தால் என்ன என மற்ற வேலைகளை பார்க்க கிளம்பிவிட்டார்.