Cinema News

ஆர்யா வெளியிட்ட ‘சீமத்துரை’ ஃபர்ஸ்ட் லுக்!

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய்கிருஷ்ணா தயாரிக்கும் புதிய படம் ‘சீமத்துரை’.

கீதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார். நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை ஐந்து மணிக்கு நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.