வாயில்லா ஜீவன்களுக்கும் உரிமை உண்டு! – விஷால்

கேரளாவில் தெருநாய்களைக் கொல்ல எடுக்கப்பட்டுள்ள முடிவை எதிர்த்தார் விஷால் தெருநாய்க்குப் பரிவுகாட்டும் விஷால், அங்கு மாடுகள் கொல்லப் படுவதை என்ன செய்யப் போகிறார் என்று கேள்வி கேட்கப்பட்து.

இது பற்றி விஷால் கூறும்போது “மனிதர்களைப் போல விலங்குகளுக்கும் வாழும் உரிமை உள்ளது. அவற்றை சித்திரவதை செய்ய கொடுமை செய்ய யாருக்கும் உரிமை இல்லை.வாயில்லா ஜீவன்களுக்கும் உரிமைஉண்டு. இது பற்றிச் சட்டமே உள்ளது.அப்படி voiceless விலங்குகளுக்கு voice கொடுப்பது தவறா?

அடிமாடுகளாக ஏற்றிச் செல்லப்படும் மாடுகள் படும் சித்திரவதைகள், கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதைத்தடுக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். ஒரு லாரியில் 6 மாடுகள்தான் ஏற்றிச் செல்லவேண்டும். இந்தச் சட்டத்தை மீறி 40 மாடுகள் 50 மாடுகள் என்று ஏராளமாக ஏற்றிச் செல்லப் படுகின்றன. படுத்தால் தூங்கிவிடும் இடத்தை அடைக்கும் என்று அவை கண்களில் மிளகாய்தூள் தூவி காதுகளுக்குள் வெந்நீர் ஊற்றி கொடுமை செய்யப் படுகின்றன அடிமாடுகளாக ஏற்றிச் செல்லப்படும் மாடுகள் கொல்லத்தான் கொண்டு செல்லப்படுகின்றன.ஆனால் இப்படிக் கொண்டு போகும்போது அவை பாதியிலேயே இறந்து விடுகின்றன.கொல்வதைக்கூட கௌரவமாகக் கொல்லுங்கள் சித்திரவதை செய்யாதீர்கள் என்கிறோம்.இதைத்தான் சட்டமும் சொல்கிறது. இதுபற்றி 15 ஆயிரம் பேர் கொண்ட கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வுக்காக பேசினேன் இதைச் சொல்ல நடிகர் விஷால் தேவையில்லை சாதாரண தனிமனிதன் விஷாலே போதுமே.

இது எந்த இனம் மதம் அரசியல் சார்ந்த விஷயமுமல்ல.யாருக்கும் எதிரானதல்ல.அப்படியா இருக்கிறது? இல்லையே. உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்பது தவறா? வாயில்லாத ஜீவன்களுக்கும் உரிமையுண்டு .இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டப்படி தடுத்து வரும், துன்பப்படும் மாடுகளை மீட்டெடுத்து பாதுகாத்து வரும் கோவை ‘கேட்டில் வெல்பேர் டிரஸ்ட்’ டுடன் இணைந்து செயல்பட்டேன் .வாயில்லா ஜீவன்களுக்கும் உரிமை உண்டு என்று அப்படி சட்டவிரோதமாக ஏற்றிக் சென்று துன்பப்படும் மாடுகளை மீட்டெடுத்து பாதுகாப்பது அவர்களின் பணி. அப்படி மீட்கப் பட்ட ஒரு மாட்டைப் பார்த்த போது கண்கலங்கியது.” என்றார் விஷால்.