கபாலி குறித்து வாய்திறக்காத ஷங்கர்..!


‘கபாலி’ படம் குறித்து பல்வேறு இடங்களில் இருந்து கலவையான விமர்சனங்கள், பாராட்டுக்கள் இன்னும் கூட வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இரண்டே இரண்டு பேர் மட்டும் இன்னும் கபாலி’ படத்தை பற்றி வாய்திறக்காமல் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம் தான்..

ஒருவர் கபாலிக்கு முன் ரஜினிக்கு ‘லிங்கா’ என்கிற பிளாப் படத்தை கொடுத்த ஆஸ்தான இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இன்னொருவர் ஏற்கனவே ரஜினிக்கு இரண்டு ஹிட்டுகளை கொடுத்து மூன்றாவது ஹிட்டுக்காக ரஜினியை வைத்து தற்போது ‘2.O’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஷங்கர்.

இவர்கள் பாராட்டித்தான் கபாலி நல்ல படம் என தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அல்லது இவர்கள் கட்டாயம் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்கிற நிர்பந்தமும் இல்லைதான். ஆனால் இவர்கள் இன்னும் கபாலி படத்தை பார்க்கவில்லையா..? இல்லை, பார்த்துவிட்டு ரஜினியிடமே நேராக தங்களது கருத்துக்களை சொல்லிவிட்டார்களா என்பதும் சம்பந்தப்பட்ட மூவருக்கு மட்டுமே வெளிச்சம்..!