ஆலகாலம் ; விமர்சனம்


கதையின் நாயகன் ஜெய கிருஷ்ணாவும் ஒழுக்கம், கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மாணவனாகத் கல்லுரியில் திகைக்கிறார் அவர் உடன்படிக்கும் மாணவி சாந்தினிக்கு நாயகன் மீது காதல் ஏற்பட்ட இருவரும் காதல் திருமணம் செய்துகொள்கிறார்கள். இது கல்லுரிக்கு தெரியவர இருவரையும் கல்லுரி நிர்வாகம் இருவரையும் கல்லுரியில் இருந்து வெளியேற்றுகிறது பின்பு தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகின்றனர் அப்போது நாயகன் வேலை தேடியும் கிடைக்காததால் எலெக்ட்ரிசன் வேலைக்கு சென்று தன் குடும்பத்தை சிறப்பாக பார்த்துக்கொள்கிறார்.

அப்போது தன்னுடன் வேலை செயும் நண்பன் மூலம் குடிக்க தொடங்கும் நாயகன் அதற்கு அடிமையாகிறார்ன் இந்த காதலால் ஜெயகிருஷ்ணாவின் வாழ்வில் நுழையும் வஞ்சகம் மற்றும் சூழ்ச்சி அவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது அதன் விளைவாக ஒரு காலையும் இழந்து , ஒரு தாயின் கனவும், ஒரு இளைஞனின் லட்சியமும் மதுப்பழக்கத்தால் எப்படி சிதைக்கப்படுகிறது, என்பதை சொல்வது தான் ‘ஆலகாலம்’.

கிராமத்து அப்பாவி மாணவராக அனைவரையும் கவரும் வகையில் நடித்திருக்கிறார் இயக்குனர் ஜெயகிருஷ்ணா.மதுப்பழக்கத்துக்கு ஆளான பின்பு அவருடைய நடிப்பு வியக்க வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் சாந்தினிக்கு இளமைத்துள்ளல், குடும்பப் பொறுப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்துகிற வேடம்.இரண்டிலும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

கணவனை இழந்த மனைவி குழந்தைக்காக கஷ்டப்படும் அம்மா என இரண்டையும் அழகாக செய்து இருக்கிறார் ஈஸ்வரி. கதாநாயகி துயரப்படும்போதெல்லாம் தோள் கொடுக்கிற தீபாசங்கர் , உழைத்துப் பிழைக்க வந்தவனுக்கு போதையின் பாதையைக் காட்டுகிற தங்கதுரை, தொழிலாளிகளை மதிக்கிற கட்டட மேஸ்திரியாக சிசர் மனோகர் என இன்னபிற நடிகர், நடிகைகளின் பங்களிப்பும்,

கதைக்களத்தின் நீள அகலத்துக்கேற்ற கா.சத்தியராஜின் ஒளிப்பதிவும் நிறைவு. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாபா பாஸ்கர் ஆட்டம் போட்டிருக்கும் ‘குடி குடி குடி’ பாடலில் உற்சாகம் தெறிக்கிறது. பின்னணி இசையில் காட்சிகளின் தன்மைக்கேற்ப உழைத்திருப்பது தெரிகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கை மதுப்பழக்கத்தால் எப்படி சீரழிகிறது, படிக்க வேண்டிய காலத்தில், மற்ற விசயங்கள் மீது கவனம் செலுத்தினால் வாழ்க்கை எப்படி திசைமாறும் என்பதை நோக்கி பயணிக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஜெயகிருஷ்ணா, ஒரு மனிதனை மது பழக்கம் எப்படி எல்லாம் ஆட்கொள்கிறது என்பதை காட்சிக்கு காட்சி சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.