சாய் இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ் மெண்ட்டின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

சாய் இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ் மெண்ட்டின் 6வது பட்டமளிப்பு விழா நேற்று ஹாப்லிஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சாய் இண்டர் நேஷனல் முதல்வர் வினோத்குமார் அனைவரையும் வரவேற்றார்.

தொலைக்காட்சி புகழ் தலைமை செப்கள் சன்டிவி’ கிச்சன் கலாட்டா’ புகழ் பழனி முருகன், ஜிடிவி சித்தார்த், ‘புதுயுகம்’ பாலகிருஷ்ணன் ,ஹோட்டல் அம்பிகா எம்பயர் பொது மேலாளர் முரளி, ஹாப்லிஸ் ஹோட்டல் பொது மேலாளர் சுவாமிசக்திவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தனர்.

விழாவில் சாய் இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட்டின் பயிற்சி மற்றும் ப்ளேஸ் மெண்ட் அலுவலர் ராமலிங்கம், துறை நிபுணர்கள் ,நிர்வாக அலுவர்கள் வல்லராஜ், ஜெயராமன், முருகன், வெங்கடேஷ் சதிஷ்குமார், ராஜலட்சுமி, முத்து லட்சுமி ,பாஸ்கர் ஆகியோரும் கௌரவிக்கப் பட்டனர்.

ஹோட்டல் அம்பிகா எம்பயர் பொது மேலாளர் முரளி பேசும் போது” படிப்பை முடித்து இருக்கும் உங்களை இந்த உலகம் அன்புடன் வரவேற்கிறது. ” என்றார்.

‘சன்டிவி’ புகழ் செப் பழனிமுருகன் பேசும் போது, ” இங்கே படிப்புடன் மனதையும் சுத்தப்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். எதிலும் இலக்கை நிர்ணயித்துப் பயணம் செய்யுங்கள் மேலே வரலாம்” என்றார்.

ஜிடிவி செப் சித்ததார்த் பேசும் போது”படிப்பை முடித்து பணியுரியும் போது சின்ன ஹோட்டல்,பெரியஹோட்டல் என்று பாகுபாடு பார்க்காதீர்கள் .எங்கும் அனுபவம் கிடைக்கும். கற்றுக் கொள்ளலாம். சீனியரிடம் கற்றதை உங்கள் ஜூனியரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உணவு இருப்பிடம், தங்குமிடம் தரும் வேலை இதுதான். நேர்மையாக இருங்கள் உலகம் முழுக்க பணிபுரியலாம் ” என்றார்.

விழா முடிந்து சாய் இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ் மெண்ட்டிமாணவர்கள் செப்களிடம் ஆர்வமுடன் கலந்துரையாடினர். இவ்வாறு ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இனிதே நடந்தேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *