சிவகார்த்திகேயனை வம்பிழுத்த கௌதம் மேனன்..!


‘ரெமோ’ சக்சஸ்மீட்டில் சிவகார்த்திகேயன் அழுதாலும் அழுதார்.. ஒருபக்கம் அவருக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்தாலும் இன்னொரு பக்கம் கேப் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவரை கிண்டலடிக்கவும் தவறவில்லை.. இப்போது கிண்டலடிப்பவர்களின் லேட்டஸ்ட் பட்டியலில் சேர்ந்துள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

சில தினங்களுக்கு முன் அச்சம் என்பது மடமையடா படத்திற்கான பிரஸ்மீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கௌதம் மேனன். இந்தப்படத்தின் தாமதம் குறித்தும், சிம்புவின் டார்ச்சர் குறித்தும் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, நடந்தது நடந்துவிட்டது.. என்னால் சிவகார்த்திகேயன் போலெல்லாம் அழ முடியாது என கூறினார்..

சிவகார்த்திகேயனை இந்த விஷயத்தில் எதற்காக இழுக்கவேண்டும்… அவருக்கும் இவருக்கும் என்ன வாய்க்கா தகராறு என பத்திரிகையாளர்கள் குழம்பி போய்விட்டதை காணமுடிந்தது.

Gautham menon teased Sivakarthikeyan

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *