கமலின் மகளை தூக்கிவிட்டு அந்த இடத்தில் அமர்ந்த கமலின் தோழி..!

 

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.. இந்தப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷராவை கதாநாயகியாக நடிக்கவைக்க இருப்பதாக பேச்சுவார்த்தை அடிபட்டது..அந்தவகையில் இது அக்சராவுக்கு தமிழில் முதல் படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது…

 

ஆனால் இப்போது கமலின் மகள் அக்சராவுக்கு பதிலாக அந்த இடத்திற்கு கமலின் தோழியான ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளார். விஷாலுடன் இரண்டு படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த ஆண்ட்ரியாவுக்கு இப்போதுதான் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. ஏற்கனவே கமலை வைத்து தான் இயக்குவதாக சொல்லப்பட்ட படம் நின்றுபோனதால், மிஷ்கின் அக்சராவை விலக்கி இருக்கமாட்டார் என்றே நாம் நினைப்போம்.