கமலின் சுயபுராணமாக மாறிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி


கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 40வது நாளை தொட்டுவிட்டது. ஆனால் பார்வையாளர்களின் மனதை மட்டும் இன்னும் இந்த நிகழ்ச்சியால் தொடமுடியவில்லை. ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு நடித்து வருவதால் இந்த நிகழ்ச்சியில் உண்மைத்தன்மையை பார்க்க முடிவதில்லை என்று பார்வையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

கமல் தோன்றும் சனி, ஞாயிறு மட்டும் ஓரளவிற்கு சுவாரஸ்யமாக இருந்து வந்தது.. அதுகூட ஆரம்பத்தில் தான்..குறிப்பாக இந்த நிகழ்ச்சியை கமல் தனது அரசியல் மற்றும் சினிமாவுக்கும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி வருகிறார் இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே கமலின் சுயபுராணம் சற்று அதிகமாகவே இருக்கிறது.

முன்பெல்லாம் எப்பபோதாவது தன்னைப்பற்றிய ஒரு விஷயத்தை சொல்லிக்கொண்டவர், தற்போது யாராவது ஒரு போட்டியாளருடன் உரையாடும்போதெல்லாம் தன்னைப்பற்றி புராணம் பாட ஆரம்பித்து விடுகிறார். எதுவுமே ஓவர் டோஸாக இருந்தால் போகப்போக சலிப்பு தட்டிவிடும் தானே..

டிவி ரிமோட் எங்கள் கையில் இருப்பதை மறந்துவிடாதீர்கள் கமல் என பிக்பாஸ் பார்வையாளர்கள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டதை சோஷியல் மீடியாவில் நன்றாகவே பார்க்க முடிகிறது.