‘உன் பெயரை மாற்றிவிட்டு வா.. உனக்கு படம் தருகிறேன்” ; ஒளிப்பதிவாளரை கலாய்த்த மிஷ்கின்..!


விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘படை வீரன்’.. மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றிய தனா என்பவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.. இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் ராஜவேல் மோகன்.. இவர் ஏற்கனவே ராஜவேல் ஒளிவீரன் என்கிற பெயரில் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்..

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மிஷ்கின் பேசும்போது இந்த பெயர் மாற்றத்தை குறித்து கிண்டலடித்தார்.. “ஏம்ப்பா.. ஒளிவீரன்னு எவ்வளவு அழகா கெத்தா பெயர் வச்சிருந்தே.. அதை மாத்திட்டியே.. நான் உன் கூட சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. நீ பேரை மாத்திட்டு வா.. உனக்கு படம் தர்றேன்” என கலாய்த்தார்.