ஆளுங்கட்சியை விமர்சித்தாரா எம்.எஸ்.பாஸ்கர்..?


சமீபத்தில் அதிமுக பொதுக்குழுவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து, நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் முட்டாள்தனமானவை என்றும் இதுபோன்ற அடிப்படை தகவல் கூட தெரியாமல் தான் முதலைமைச்சர், 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், 133 எம்.எல்.ஏக்கள், 54 எம்பிக்கள், சபாநாயகர் என வரிசைக்கட்டி நிற்ப்பது கேலிகூத்தானது என்றும் இத்தனை முட்டாள்களை தேர்ந்தெடுத்தவன் தமிழன் என்றும் காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சமூக வலைதளத்தில் கூறியதாக ஒரு பரபரப்பான தகவல் வெளியானது..

ஆனால் எம்.எஸ்.பாஸ்கரோ “நான் இதை பதிவிடவில்லை, எனக்கு அரசியல் ஈடுபாடு அறவே கிடையாது, நான் நடிப்பதில் மற்றும் தான் கவனம் செலுத்துகிறேன், எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. மற்ற செய்திகளை வாட்ஸப்பில் பகிரும் போது தவறுதலாக இந்தச் செய்தி பதிவாகி இருக்கலாம், மற்றபடி எனக்கு யாரிடமும் எந்த எதிர்ப்புகளும் கிடையாது” என மறுப்பு கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *