“நீ அடுத்த அமலாபால் ஆகிவிடாதே” ; மலையாள நடிகையை மந்திரித்த மம்மி..!


ஒரு இயக்குனர் இயக்கும் அடுத்தடுத்த படத்தில் ஒரு ஹீரோயின் தொடர்ந்து நடித்தால் இருவருக்கும் காதல் என கதைக்க கிளம்பத்தானே செய்யும்.. இப்படி ஏற்கனவே கிளம்பிய கதைகளில் பாதி பொய்யாகப்போனதும் உண்டு.. பாதி உண்மையாக நடந்துள்ளதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்..

அதற்கு சமீபத்திய உதாரணம் ஏ.எல்.விஜய்-அமலாபால் காதல்-கல்யாணம்-டைவர்ஸ் என இரண்டே வருடங்களுக்குள் டைவர்ஸ் வாங்கியும் விட்டார்கள்.. இப்படித்தான் இன்னொரு மலையாள நடிகையான மியா ஜார்ஜ் ‘அமர காவியம்’ இயக்குனர் ஜீவா சங்கருடன் நெருக்கம் காட்டி வருவதாக சொல்லப்பட்டது.. அதனால் அந்த இயக்குனர் அடுத்ததாக இயக்கியுள்ள ‘எமன்’ படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டார் என சொல்லப்படுகிறது..

இருவருக்கும் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்ட நிலையில் இந்தவிபரம் நடிகையின் மம்மி காதுக்கு போக, உடனே மகளை அழைத்து “நீயும் இன்னொரு அமலாபால் ஆகப்போறியா..? முதல்ல நடையை கட்டு ஊருக்கு” என அவரை மந்திரித்து கேரளாவுக்கு அழைத்து சென்றுவிட்டாராம்.