சிவகார்த்திகேயனுடன் சூர்யாவை ஒப்பிடுவதா..? விஜய் ரசிகர்கள் ஆவேசம்..!


சமீபகாலமாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சவாலான சரியான போட்டி என்பதாக விஜய்சேதுபதியைத்தான் அனைவருமே குறிப்பிட்டு வருகிறார்கள்.. ஆனால் தற்போது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் படத்தை சூர்யாவின் படத்துடன் ஒப்பிட்டு சிலர் பேசிவருகிறார்கள்.

அதாவது சிவகார்த்திகேயனின் 12வது படமான வேலைக்காரன் படத்தின் பட்ஜெட் 38 கோடி எனவும் அதேசமயம் சூர்யாவின் 35வது படத்தின் பட்ஜெட்டோ வெறும் 36 கோடிதான் என்பதையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ஆனால் இந்த ஒப்பீட்டை பார்த்து சூர்யாவின் ரசிகர்களுக்கு கோபம் வந்ததோ இலையோ, கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சூர்யாவுக்கு ஆதரவாக பதிலடி கொடுத்துள்ளனர். சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர் அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீசருக்கான லைக்குகளை விட அதிகம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, “பெருமை என்பது பட்ஜெட்டில் இல்லை. ரசிகர்களின் பலத்தில் தான் இருக்கிறது” என பதிலடி கொடுத்துள்ளனர்.