Meagaamann Press Meet Stills

surya_jyothika

சூர்யாவுடன் திருமணம் ஆன பிறகு தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் நடிகை ஜோதிகா… திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் மீண்டும் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது ஜோதிகாவின் தனிப்பட்ட முடிவில்லையென்றாலும் சூர்யாவில் இடையூறு இதில் இருப்பதாக அப்போதே பல பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன… இந்நிலையில் ஜோதிகா மீண்டும் அவரது சினிமா வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார்.

மலையாளத்தில் வெளியான How old Are You படத்தின் தமிழ் ரிமேக்கில் தான் நடிகை ஜோதிகா நடிக்கிறார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன… திரையில் மீண்டும் சந்திரமுகி ஜோதிகாவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்…