“ஆவி படம் என்றவுடன் தெர்மாகோல் நினைவிற்கு வந்து விட்டது” ; அமைச்சரை கலாய்த்த கமல்..!


கமல்ஹாசன் சமீப காலமாக அரசியலில் நிகழும் வேடிக்கை வினோத நிகழ்வுகளை போகிற போக்கில் நாசூக்காகவும், நாகரிகமாகவும் கிண்டலடித்து வருகிறார்.. அந்தவகையில் சமீபத்தில் வகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க அதை தெர்மாகோல் போட்டு மூடும் அறிவு (!!) சார்ந்த திட்டத்தை துவக்கி வைத்தார்..

அவர் நடத்திய இந்த கேலிக்கூத்து தான் இன்றைய சோஷியல் மீடியாவில் ட்ரோல் மன்னர்களின் அகோரப்பசிக்கு தீனிபோட்டு வருகிறது.. கமல் மட்டும் இதை கண்டுகொள்ளாமல் விடுவாரா என்ன..? தனது உதவியாளர் சக் இயக்கியுள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படஹ்தின் இசைவெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்ட கமல் படம் குறித்து பேசும்போது, அப்படியே தெர்மாகோல் விவகாரத்தையும் டச் பண்ணினார்..

“சினிமா ரசிகர்களுக்கே உண்டான பெருமை உங்களுக்கு முன்னாடியே நான் இந்தப்படத்தை பார்த்துட்டேன் என் சொல்லிக் கொள்வது தான். அப்படி இந்த படத்தின் டிரைலரை நான் பார்த்து விட்டேன் என சொல்வதில் எனக்கு பெருமை. இந்த படம் நன்றாக கவர் செய்யப்பட்ட படம், தெர்மாகோலால் அல்ல. ஆவி படம் என்றவுடன் தெர்மாகோல் நினைவிற்கு வந்து விட்டது. தவறாக நினைக்க வேண்டாம்” என நையாண்டியாக பேசி விட்டு இசையை வெளியிட்டு விட்டு போனார் உலகநாயகன் கமல்ஹாசன்.