நயன்தாரா காலில் ஏன் விழவேண்டும்..? ; லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்..!


நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம் ‘அறம்’. இப்படம் நடிகை, இயக்குனர் என்பதை தாண்டி அழுத்தமான கதையால் மிகவும் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், வீரியம் மிக்கதாக இருந்தன. நிறைய பேர் பாராட்டி வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறம் படம் பற்றிய மனக்குறையை கொட்டியுள்ளார்..

“‘அறம்’ படம் பார்த்தேன். நயன்தாராவின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் நன்றாக இருந்தது. மேலும், படத்தில் 2 பிடிக்காத விஷயங்கள் இருக்கிறது. முதலாவது, தங்கையை காப்பாற்றிய அண்ணன் தான் படத்தின் ஹீரோ. அவனை எல்லோரும் கொண்டாடவில்லை என்பது வருத்தம். இரண்டாவதாக குழியில் இருந்து வெளியே எடுத்த அச்சிறுமிக்கு மருத்துவ உதவி செய்யாமல் அவளது பெற்றோர்கள் கலெக்டரான நயன்தாராவின் காலில் விழ வேண்டிய அவசியம் என்ன” என்று கேள்வி எழுப்பியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.. ஆக இந்தப்படத்தை அவர் உணர்வுப்பூர்வமாக பார்க்காமல் வியாக்கியானம் செய்யும் நோக்கத்துடன் பார்த்திருக்கிறார் என்பாத்து நன்றாகவே தெரிகிறது..