ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்-தினகரனை செமையாக நக்கலடித்த லட்சுமி ராமகிருஷ்ணன்..!


சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் குடும்பத்து பெண்களின் மனதிலும் வீட்டிலும் இடம்பிடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.. ஆனால் சோஷியல் மீடியாவிலும் சினிமா, டிவி காமெடி நிகழ்ச்சிகளிலும் அவரை கழுவி ஊற்றுவதும் மீம்ஸ் போட்டு கலாய்ப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் சமீபத்தில் ஒரு காமெடி நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்றார்.. அந்த நிகழ்ச்சியி நடத்தியவர்கள் சொல்வதெல்லாம் உண்மை பாணியிலேயே லட்சுமி ராமகிருஷ்ணனை வைத்து காமெடியாக நிகழ்ச்சியை நடத்தினர்..

அந்த நிகழ்ச்சியில் இருவர் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் போலவும் இன்னொருவர் தினகரன் போலவும் கெட்டப்புகளுடன் வந்து அமர்ந்து தங்கள் தரப்பு நியாயங்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்க, வழக்கம்போல நீதிபதி போல இரண்டு தரப்பையும் தனது பாணியில் கலாய்த்து தள்ளி இந்த மூவர் மீதும் தனக்கிருந்த கோபத்தையும் வெறுப்பையும் வெளிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *