ஒரு இயக்குனரின் காதல் டைரி ; கலக்கத்தில் சில நடிகைகள்…!


ஒரு காலத்தில் திறமையான ஒளிப்பதிவாளராக இருந்தவர் தான் வேலு பிரபாகரன்.. மாவீரனின் பெயர்கொண்ட இவர் சில புரட்சிகரமான படங்களில் நடித்து புரட்சிகரமான கருத்துக்களையும் பேசினார்.. ஆனால் அடுத்து அதைவிட புரட்சிகரமான விஷயம் ஒன்றை தான் இயக்கிய படத்தில் செய்துகாட்டினார்..

‘வேலு பிரபாகரன் காதல் கதை’ என ஒரு படத்தை எடுத்து அதில் கதாநாயகிகளை மேலாடை இல்லாமல் நடிக்க வைத்து தியேட்டரில் நேரடியாகவே பிட்டுப்படம் ஓட்டினார்.. ஆனால் பெயர் பாப்புலரான அளவுக்கு படம் ஓடாததால் இவ்வளவு நாளாக அமைதியாக இருந்தவர், இப்போது ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ என்கிற படத்தை ஆரம்பித்துள்ளார்..

இதில் சினிமாவில் பிரபலமாக இருந்த பல கதாநாயகிகளின் அந்தரங்கத்தை புட்டுப்புட்டு வைக்க இருக்கிறாராம். இதை கேள்விப்பட்டதில் இருந்து எங்கே தங்களது கதையை படமாக்கி விடுவாரோ என ஒரு காலத்தில் இவருக்கு நட்பான சில நாயகிகள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.