தணிக்கை குழு மீது மணிரத்னம் சாடல்..!


கடந்த சில வருடங்களாக தமிழில் படங்களை சென்சார் செய்வதில் பல இன்னல்களையும் சங்கடங்களையும் சந்திப்பதாக பல இயக்குனர்கள் புலம்பி வருகிறார்கள்.. சென்சார் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் சிலர் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு.. இன்னும் சிலர் நியாயம் கிடைக்கவில்லை என்று கோர்ட்டுக்கு போனார்கள்..

ஆனால் ஒரு சிலரின் படங்களுக்கு மட்டும், அது குப்பையாக இருந்தாலும் ஆபாசம் தூக்கலாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சென்சாரில் ஒகே பண்ணப்பட்டது என்று சொல்கிறார்கள்.. காரணம் அவர்கள் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள் என்பது தானாம். அதேபோல ஒருசிலரின் படங்களில் ஆளுங்கட்சிக்கு பிடிக்காத மாதிரி கருத்துக்கள் இருந்தால் சென்சாரில் சிக்கலை ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்துள்ளதாம்.

சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய இயக்குனர் மணிரத்னம் சுயமாக இயங்கவேண்டிய தணிக்கை வாரியம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது என்றும் தனது ‘பம்பாய்’, இருவர்’ ஆகிய படங்களின்போதும் இதுபோன்ற குறுக்கீடு இருந்தது என்றும் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.