“குறைஞ்சது 3000 பேர் இருக்கணும்” ; கார்த்தி கண்டிஷன்


கார்த்தி முதன்முதலாக தனது அண்ணி ஜோதிகா நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’ என்கிற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கார்த்தி பேசும்போது, அவரை நிறைய பேர் பாடிக்காட்டும்படி கேட்டுக்கொண்டார்கள்..

ஆனால் அவரோ, “நோ.. நோ.. நான் பாடனும்னா குறைஞ்சது மூவாயிரம் பேராவது அங்க இருக்கணும்” என சொல்லி பாடாமல் எஸ்கேப் ஆனார்.. இந்த விழா சுமார் ஆயிரம் பேர் வரைக்குமே அமரக்கூடிய சத்யம் தியேட்டரில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.