கவிஞரை மாடியிலிருந்து தள்ளி கொலைசெய்ய முயற்சித்தாரா பார்த்திபன்..?


தமிழ் சினிமாவில் கவிஞர் ஜெயங்கொண்டான் என்கிற பெயரில் ஒரு பாடல் ஆசிரியர் சில படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனிடம் உதவி இயக்குனராகவும் மற்றும் சில உதவிகரமான வேலைகளையும் பார்த்து வந்தவர். இந்த நிலையில்தான் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக பார்த்திபன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் ஜெயம்கொண்டான். குறிப்பாக தன்னை பார்த்திபனும் அவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவருமாகச் சேர்ந்து ஒரு சினிமா தியேட்டரில் மூன்றாவது மாடியிலிருந்து தள்ளிவிட முயற்சித்தார்கள் என புகாரில் கூறியுள்ளார்.

அதே சமயம் கடந்த வருடம் இதே ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பலர் மீது தனது வீட்டில் பொருட்கள் காணாமல் போனதாக பார்த்திபன் கொடுத்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதில் என்னைத்தவிர ஒரு சிலரை பார்த்திபன் வேலையை விட்டு நீக்கி விட்டார் என்று சொல்லும் ஜெயம்கொண்டான் தன்மீது என்ற குற்றச்சாட்டும் இல்லை என அப்போதைய போலீசார் கூறிவிட்டதாக சொல்லியிருக்கிறார். இந்த நிலையில்தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை பார்த்திபன் மீது சுமத்தியிருக்கிறார் ஜெயங்கொண்டான்.

இதுகுறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு அளவுகோல் இல்லாமல் போய்விட்டது. என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி, இன்று காலை அதே அலுவலகத்தில் என் மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர, கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர்.. மகிழ்ச்சி.. இது ஏதோ நம்மால் இயன்றது.. பாடல் வாய்ப்புதான் வழங்க முடியவில்லை.. சபையில் பாடல் எழுதி பெயர் வாங்கும் கவிஞர்களும் இருக்கிறார்கள்..” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்
இதன் மூலம் பார்த்திபன் ஜெயம்கொண்டான் மீது ஏதோ புகார் அளிக்க போக அதிலிருந்து தப்பிக்கும் விதமாகத்தான் ஜெயம்கொண்டான் பார்த்திபன் மீது இப்படி ஒரு புகார் அளித்திருக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள்.