ஸ்ரீ ரெட்டி பிரச்சனை முடிந்ததென்றால் இப்போது ஓவியா ; சங்கடத்தில் லாரன்ஸ்


ஆந்திராவை சேர்ந்த கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கிலும் தமிழிலும் உள்ள சில நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுக்கடுக்காக அடுக்கி வந்தார்.. அதில் இயக்குனர்களில் முருகதாஸும் ராகவா லாரன்ஸும் கூட அடக்கம்.. ஆனால் ராகவா லாரன்ஸ் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்ததோடு, ஸ்ரீ ரெட்டியை சாந்தப்படுத்தும் விதமாக தன்னுடைய படத்தில் அவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் தருவதாக வாக்களித்தார்.

அந்தப் பிரச்சினை அடங்கிய நிலையில் தற்போது காஞ்சனா-3 திரைப்படத்தில் நடித்துவரும் ஓவியா மூலம் இன்னொரு விதமான சங்கடம் லாரன்ஸுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான 90ml படத்தில் படு கவர்ச்சியாக, இல்லை இல்லை.. படு கேவலமாக நடித்துள்ளார் ஓவியா.. இதே ஓவியாதான் லாரன்ஸின் காஞ்சனா-3 திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். ஓவியாவின் இந்த செயலால் அப்செட் ஆன லாரன்ஸ் ஓவியாவின் காட்சிகளை குறைத்துவிட்டு, இன்னொரு நாயகியான வேதிகாவிற்கு காட்சிகளை அதிகப்படுத்தும் முடிவிற்கு வந்து விட்டாராம்

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *