செல்பி வீடியோ எடுத்த இளைஞர் ; சிவக்குமாரிடம் கற்ற வித்தையை பயன்படுத்திய ரஜினி


சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சிவகுமார் தன்னை செல்பி எடுக்க முயன்ற இளைஞர்களது செல்போனை தட்டிவிட்ட நிகழ்வுகள் அடுத்தடுத்து இரண்டு முறை நடந்த மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் நேற்று விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது ரசிகர் ஒருவர் தூரத்திலிருந்தபடியே செல்ஃபியா வீடியோ எடுக்க ஆரம்பித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அருகில் வந்ததும் அவருடன் இணைந்து நடந்தவாறே செல்பி வீடியோ எடுத்து கொண்டே வந்த அந்த ரசிகர் ரஜினி தனது காருக்கு அருகில் வந்ததும், “சார் உங்க உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் தான் எங்களுக்கு முக்கியம்” எனக் கூற, அதுவரை மிகப் பொறுமையாக அந்த இளைஞர் செல்பி எடுப்பதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் நடந்து வந்த ரஜினி, அவரிடம் புன்னகைத்துக் கொண்டே காரில் ஏறினார். இந்த நிகழ்வு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பக்குவமான அணுகுமுறையை அழகாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இத்தனைக்கும் சினிமாவில் ஆரம்ப நாட்களில் கோபமும் டென்ஷனுமாக காட்சியளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, யோகா மற்றும் தியானம் போன்றவற்றை கற்றுக்கொடுத்து அமைதியான மனநிலையுடன் இருப்பது எப்படி என சொல்லிக்கொடுத்தவர் நடிகர் சிவகுமார் தான். சிவகுமார் அப்போது சொல்லிக் கொடுத்த பயிற்சிதான் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கைகொடுத்து வருகிறது.. ஆனால் சிவகுமாருக்கு அது கைகூடாமல் போனது வேறு விஷயம்

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *