ரஜினியை அட்டாக் பண்ணி வசனம் பேசிய சந்தானம்..!


நெகடிவ் பப்ளிசிட்டி என்பது எப்போதுமே வளர்ந்துவரும் ஹீரோக்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.. காரணம் அப்போதுதான் படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும். அதற்கு சந்தானம் மட்டும் விதிவிலக்கா என்ன..? விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’.. சந்தானத்துடன் லொள்ளுசபா காலத்திலிருந்தே நண்பனாக இருக்கும் சேதுராமன் என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் காட்சியில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்திருந்தார் சந்தானம். அதாவது சிவாஜி படத்தில் “இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டியே சிவாஜி” என பேசும் வில்லன் ஆட்களிடம், “கண்ணா பண்ணிங்க தான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிளாத்தான் வரும்” என பஞ்ச் பேசிவிட்டு எதிரிகளை ரஜினி பந்தாடுவார் இல்லையா.?

அதை கிண்டலடிக்கும் விதமாக, இந்தப்படத்தில் சந்தானத்தை பார்த்து இப்படி தனியே வந்து மாட்டிக்கிட்டியே என எதிரிகள் கேட்க, அவர்களை அடித்து துவைக்கும் சந்தானம், பஞ்ச் பேசிட்டு அடிக்கிறது மற்றவர்கள் பாணி.. ஆனா பஞ்ச் டயலாக் பேசுறவங்களையே அடிப்பது என்னோட பாணி” என சந்தானம் கூறுகிறார்.

இது தேவையில்லாமல் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் கலாய்ப்பது போல இருப்பதாகர ரஜினி ரசிகர்கள் கருதுகிறார்களாம்.. ஆனால் சந்தானமோ இந்த நெகடிவ் பப்ளிசிட்டிதான் தனது படத்துக்கு உதவும் என திட்டமிட்டே அப்படி வசனங்களை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *