“எவனோ 10 பணக்கார பசங்க போறதுக்காக…” ; 8 வழி சாலை திட்டத்தை விளாசிய சத்யராஜ்


தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னைக்கு அடுத்தபடியாக தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னை சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டம். இந்தத் திட்டத்தை ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வருகிறார்கள் குறிப்பாக திரையுலகில் உள்ள சத்யராஜ், கமல் உள்ளிட்ட பலர் இந்த திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகின்றனர்.

சமீபத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விவசாயிகள் சிலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், `எவனோ 10 பணக்கார பசங்க சென்னைக்கும் செல்வத்துக்கும் சர்ரு சர்ரு ன்னு போயிட்டு வர்றதுக்காக விவசாயிகளின் விளைநிலத்தை அழித்து சாலை போட முயற்சி செய்யும் அரசியல்வாதிகள் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை, கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்” என ஒரு பிடி பிடித்தார்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *