ஓப்பன் பிளாக் மெயில் மூலம் சம்பாதிக்கும் ஸ்ரீரெட்டி


கடந்த இரண்டு மாதங்களாக தெலுங்கு சினிமாவில் உள்ள சில இயக்குனர்களையும் நடிகர்களையும் அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டு கூறி கதிகலக்கிவந்தார் ஆந்திராவை சேர்ந்த துணை நடிகை ஸ்ரீரெட்டி.தெலுங்கு சினிமாவை சுழற்றி அடித்த ஸ்ரீரெட்டிக்கு அங்கே போரடித்துவிட்டதோ என்னவோ இங்கே தமிழ் திரையுலகம் பக்கம் துப்பாக்கியை திரும்பிவிட்டார்.

அந்தவிதமாக தமிழ் திரையுலகில் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய திரைப்பிரபலங்களின் பெயர்களை கடந்த சிலதினங்களாக பேஸ்புக்கில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ஆகியோர்களின் பெயரை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, அடுத்த யாரை வெளிப்படுத்த போகிறார் என கோலிவுட் சினிமாவே கலங்கி போய் இருக்கிறது

இவரிடம் ஆதாரம் இருக்கின்றதா.. இல்லை சும்மா போகிறபோக்கில் குற்றச்சாட்டை வீசுவோமே என கூறிவருகிறாரா என பலரும் திகைத்து போயுள்ளனர். ஒரு சிலர் ஸ்ரீரெட்டியிடம் தவறாக நடந்து இருக்கலாம். இவர் கூறிய புகார்களால் தற்போது தெலுங்கில் இவருக்கு பட வாய்ப்பு இல்லை. வேறு எந்த மொழியிலும் கிடைக்கவும் கிடைக்காது.

அதனால் வருமானத்திற்காக இப்படி ஒவ்வொரு பிரபலத்தின் பெயராக கூறி ஓப்பனிங் பிளாக்மெயில் செய்து பணம் பறிக்க ஆரம்பித்துவிட்டார் என இண்டஸ்ட்ரியில் பேசிக்கொள்கிறார்கள். பேரம் படிந்தால் ஓகே.. இல்லாவிட்டால் சும்மாவாவது பெயரை வெளியிட்டு அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தர ஆரம்பித்து விட்டார் என்றும், இதனால் அடுத்து யாரவது ஒரு இயக்குனர் அல்லது நடிகர், தயாரிப்பாளர்களிடம் உங்கள் பெயரை கோர்த்துவிடவா என பிளாக் மெயில் செய்வதற்கு இது வசதியாக இருக்கும் என்பதால் இந்த அதிரடியை தொடர்கிறாராம் ஸ்ரீரெட்டி.

இன்னும் சிலரோ, ஸ்ரீரெட்டி போய் சொல்கிறார் என்றால் சம்பந்தப்பட்டவர்களோ, அல்லது முக்கிய பொறுப்பில் இருப்பவர்களோ சட்ட ரீதியாக அவரது வாயை அடைக்க முன் வராதது ஏன்.. அப்படியானால் ஏதோ விஷயம் உள்ளே இருக்கிறதுதானே என நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்களாம்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *