சுந்தர்.சியையும் விட்டுவைக்காத ஸ்ரீரெட்டி..!


தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் கலக்கத்தில் இருப்பார்கள் என்பது உண்மை.. காரணம் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து பட்டியலிட்டு வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் பிரபலங்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறார். இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரை தொடர்ந்து தற்போது இயக்குநர் சுந்தர் சி- பெயரையும் தெருவில் இழுத்து விட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீரெட்டி, “அரண்மனை படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது, அதன் நிர்வாக தயாரிப்பாளரான கணேஷ் படப்பிடிப்பில் சுந்தர் சி-யை அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர், ஒளிப்பதிவாளர் செந்தில் குமாரையும் சந்தித்தேன். நிச்சயம் பட வாய்ப்பு தருகிறேன் என வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஹோட்டலுக்கு வர சொன்னார். பட வாய்ப்பு வேண்டுமென்றால் கணேஷ் மற்றும் சுந்தர் சி உடன் பாலியல் சமரம் செய்து கொள்ள வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும். கணேஷ் ஒரு மோசடிக்காரர், எனக்கு உதவவில்லை” என என அதிரவைத்திருக்கிறார்.

இதுவரை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியவர்கள் எல்லாம் அமைதி காத்துவரும் நிலையில், ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டை சுந்தர் சி மறுத்துள்ளார். அதோடு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் வழக்கு தொடர்வேன் என சுந்தர் சி கூறியுள்ளார்.

இன்னும் யார் யாரையெல்லாம் சந்தி சிரிக்க வைக்கப்போகிறாரோ இந்த புண்ணியவதி..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *