பா.ஜ.கவின் கையாலாகாத்தனத்தை கிழித்து தொங்கவிட்ட ரஜினி


குழந்தைகள் முன்னேற்றத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என நடிகர் ரஜினி காட்டமாக விமர்சித்துள்ளார். ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததில்லை என்று சொலப்படுவதுண்டு. குறிப்பாக கடந்த 4 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை அவர் எப்போதும் விமர்சித்ததில்லை என்றும் அவருக்கு எதிரானவர்கள் குடம் சாட்டி வருகிறனர். காலா படத்தில் கோட்ட அவர் பிஜெபியைத்தான் அடித்து துவைத்தார் என்பதைக்கூட அவர்கள் நம்ப தயாராக இல்லை.

மேலும், சமீபத்தில் கூட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பதால் பாஜகவே பலசாலி என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். எனவே, அவர் பாஜகவிற்கு ஆதரவானவர் என்கிற கருத்து நிலவி வருகிறது. ஒருபக்கம் அவருடன் கூட்டணி அமைக்க பாஜகவும் முயன்று வருகிறது. இந்நிலையில், குழந்தைகளில் நலனை காக்கும் ஒரு அமைப்பை ரஜினியின் மனைவி லதா தொடங்கியுள்ளார். அதை தொடங்கி வைத்து பேசிய ரஜினி மத்திய, மாநில அரசுகளை விளாசி பேசினார்.

அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகள் குழந்தைகள் முன்னேற்றம் மற்றும் எதிர்காலங்கள் தொடர்பாக நிதிகளை ஒதுக்கு, திட்டங்களை தீட்டுகின்றன. ஆனால், இங்கே மாநில அரசும் சரி.. மத்திய அரசும் சரி குழந்தைகளுக்காக எதையும் செய்வதில்லை. குழந்தைகள் தெருவில் பிச்சை எடுத்து வருகின்றனர். அதை காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது. அவர்களிடம் உங்களை பிச்சை எடுக்க வைப்பது யார்? என விசாரணை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? அந்த குழந்தைகளுக்கு பின்னால் பெரிய மாஃபியா கும்பல் இருக்கிறது. குழந்தைகளை கடத்தி சென்று அவர்களின் முகவரியை அழித்து, அனாதைகளாக்கி பிச்சை எடுக்க வைக்கின்றனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவிக்கின்றனர். கொலை செய்வதை விட இது பெரிய கொடுமை ஆகும். இதை தடுக்கவே எனது மனைவி இந்த அமைப்பை உருவாக்கியுள்ளார் எனபேசினார்.

ரஜினிகாந்த் முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன், குழந்தைகளின் விஷயத்தில் ரஜினிக்கு இருக்கும் அக்கறை எங்களுக்கும் இருக்கிறது என பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது