“என்னை மன்னித்து விடுங்கள்” ; பிருத்விராஜ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டாப்ஸி..!


டாப்ஸி நடித்துள்ள ‘நான் தான் ஷபானா’ படத்தில் உளவுத்துறை சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார் டாப்ஸி.. இந்தப்படத்தில் மனோஜ் பாஜ்பாயி, டேனி டென்சொங்பா ஆகியோர் நடித்து இருந்தாலும் கூட படத்தின் பிரதான வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் பிருத்விராஜ் தான்.

இவர் இன்டர்நேஷனல் கிரிமினல் டோனி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார்.. டாப்ஸியின் முக்கிய வேலையே பிருத்விராஜை தேடிக்கண்டுபிடித்து, அவர் தரும் டார்ச்சர்களை தாங்கி, அவரது கேரக்டருக்கு ஒரு முடிவை கொண்டுவருவதுதான்.

இதனால் பிருத்விராஜை டாப்ஸி திட்டுவது போலவும், அவருடன் சண்டை போடுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.. இதுகுறித்து கூறியுள்ள டாப்ஸி, “பிருத்விராஜ் ரசிகர்களே.. படம் பார்த்தபின் தயவுசெய்து என்னை கொல்வதற்காக தேடாதீர்கள்” என முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.