மரியாதை ‘நோட்டா’வுக்கல்ல.. அதை வெளியிடுபவருக்குத்தான்..!


‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படத்தில் நடித்து புகழ் பெற்ற தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டாவை வைத்து, ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள படம் நோட்டா’. தமிழில் நடிகையார் திலகம் பாடத்தில் சமாந்தாவின் ஜோடியாக தலைகாட்டினார். ஆனால் இவரது படம் வரும் அக்-5ஆம் தேதி ரிலீஸ் ரேசில் குதித்து மற்ற படங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்செதுபதி-த்ரிஷா நடித்துள்ள ‘96’, சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ஆண் தேவதை’, விவேக் நடித்துள்ள ‘எழுமின்’ விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ராட்சசன்’ ஆகிய படங்களும் இதே தேதியில் வெளியாக இருக்கிறது இதில் ’96’ படம் மட்டும் ஒருநாள் முன்னதாக அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்கனவே ஒப்பதல் பெற்ற நிலையில் இந்த நான்கு படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் கடைசி நேரத்தில் நோட்டா உள்ளே நுழைந்ததால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்த ஒரு இளம் நடிகர் படம் இங்கே தமிழில் முதன்முதலாக ரிலீசாவதற்கு ஏன் இவ்வளவு பதறுகிறார்கள்..? காரணம் படமோ, அதன் ஹீரோவா அல்ல.. அதன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான். இவர்தான் படத்தை வெளியிடுபவரும் கூட.. இவர் கைவசம் எப்போதும் கணிசமான தியேட்டர்கள் இருப்பதால் தியேட்டர்காரர்கள் தரப்பில் இவர் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.. ஆக மரியாதை ‘நோட்டா’வுக்கல்ல.. அதை வெளியிடுபவருக்குத்தான்..

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *